சிரம்பான், 10 ஜூன் (பெர்னாமா) -- கடந்த 2013-ஆம் ஆண்டு தொடங்கி போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் வெற்றி பெற்ற தனது சாதனையைத் தக்கவைத்துக் கொள்ளும் முயற்சியாக, வரும் மாநில தேர்தலில் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர்களில் பாதிக்கும் மேற்பட்டோரை வேட்பாளர்களாக களமிறக்க நெகிரி செம்பிலான் மாநில ஜனநாயக செயல்கட்சி, ஜ.செ.க முடிவெடுத்துள்ளது.
கட்சியின் வேட்பாளர் பட்டியல் தற்போது இறுதிக்கட்டத்தில் இருக்கும் நிலையில், அடுத்த சில நாட்களில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என்று ஜ.செ.க பொதுச்செயலாளர் அந்தோணி லோக் கூறினார்.
மேலும், வரும் மாநில தேர்தலில் பல புதிய முகங்களையும் களமிறக்க கட்சி ஆலோசித்து வருவதாகவும் அந்தோணி லோக் கூறினார்.
''வேட்பாளர்களில் சில மாற்றங்கள் இருந்தாலும் எங்களால் சிறப்பாக நிர்வகிக்க முடியும். ஏனென்றால், இந்த உணர்வை நாங்கள் நெகிரி செம்பிலான் மாநில டி.ஏ.பி-இல் விதைத்திருக்கிறோம். பதவியில் இருக்கும் வேட்பாளர் மாற்றப்படும்போது, ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு அவர்கள் சேவை செய்திருக்கலாம். அப்படியானால், பதவியில் இருப்பவர் புதிய வேட்பாளருக்கு ஆதரவு அளிக்க வேண்டும். வெற்றியை உறுதி செய்வதற்கும், போராட்டம் தொடர்வதற்கும் புதிய முகங்கள் தேவை'', என்றார் அவர்.
இன்று, நெகிரி செம்பிலான், சிரம்பானில் உள்ள டத்தாரான் லோபாக்கி, லோபாக் மின்னணுத் திரையைத் திறந்து வைத்த பின்னர், அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.
வரும் மாநில தேர்தலில், சென்னா சட்டமன்ற தொகுதியில் தாம் மீண்டும் போட்டியிடவிருப்பதாக, முன்னதாக லோக் முன்னதாக கூறியிருந்தார்.
60 நாள்களுக்குள் மாநிலத் தேர்தலை நடத்துவதற்கு வழிவிடும் வகையில் ஜுன் 5-ஆம் தேதி நெகிரி செம்பிலான் சட்டமன்றம் அதிகாரப்பூர்வமாக கலைக்கப்பட்டதை மாநில மந்திரி புசார், டத்தோ ஶ்ரீ அமினுடின் ஹருன் அறிவித்திருந்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)