பாகிஸ்தான், 10 ஜூன் (பெர்னாமா) -- பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டக்காரர்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
மேலும் சுமார் 200 பேர் காயமடைந்தனர்.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில், நிலவும் பொருளாதார மற்றும் அரசியல் துறைகள் தொடர்பான போராட்டங்களுக்குத் தலைமை தாங்கி வந்த Joint Awami Action Committee, ஜே.எ.எ.சி எனப்படும் பொது சமூகக் கூட்டமைக்கு அதிகாரிகள் தடை விதித்ததைத் தொடர்ந்து, போராட்டக்காரர்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே இந்த மோதல் ஏற்பட்டது.
பொது அமைதி மற்றும் பாதுகாப்பு குறித்த கவலைகளைக் கருத்தில் கொண்டு ஜே.எ.எ.சி அமைப்பு வெள்ளிக்கிழமையன்று அதிகாரிகளால் தடை செய்யப்பட்டது.
இதை தொடர்ந்து சட்ட அமலாக்கப் பிரிவினரின் நடவடிக்கையால் ஆறு போராட்டக்காரர்கள் கொல்லப்பட்டனர்.
பாதுகாப்புப் படையினர் போராட்டக்காரர்களைக் கலைக்க முயன்றபோது அக்குழுவைச் சேர்ந்தவர்கள் தானியங்கி துப்பாக்கிகள், பெட்ரோல் குண்டுகள் மற்றும் பிற ஆயுதங்களைப் பயன்படுத்தி அவர்கள் மீது தாக்குதல் நடத்தியதாகக் போலீஸ் கூறியது.
இந்த வன்முறையில் பாதுகாப்பு படையினர் நால்வரும் பலியாகியதாக போலீஸ் தெரிவித்திருக்கிறது.
பாதுகாப்பு கருதி வீதிகளில் உள்ள வணிகத் தளங்கள் மூடப்பட்டுள்ளன.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)