மெக்சிகோ சிட்டி, 10 ஜூன் (பெர்னாமா) -- 2026-ஆம் ஆண்டு உலகக் கிண்ண காற்பந்து போட்டியின் தொடக்க விழா மெக்சிகோ சிட்டியில் நடைபெறும் நிலையில், அங்குள்ள அரசாங்க ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய அறிவுத்தப்பட்டுள்ளது.
அதற்கான அரசாணையை மெக்சிகோ அரசாங்கம் நேற்று பிறப்பித்தது.
நகரின் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து இடையூறுகளை ஏற்படுத்தக்கூடிய பல ஆர்ப்பாட்டங்கள் திட்டமிடப்பட்டுள்ள நிலையில், நகரம் முழுவதும் சீரான போக்குவரத்தை உறுதிசெய்ய தனியார் துறையும் வீட்டிலிருந்தே பணிபுரிய அனுமதி வழங்க வேண்டும் என்றும் மெக்சிகோ அரசாங்கம் வலியுறுத்தியது.
புகழ்பெற்ற அஸ்டெகா அரங்கில் நாளை தொடக்க ஆட்டம் நடைபெறவுள்ளது.
இந்நிலையில், அந்நகரில் நடைபெறூம் ஆசிரியர் போராட்டங்கள் மற்றும் கடைசி நேரக் கட்டுமானப் பணிகள் ஆகியவை நகரின் வீதிகள், சுரங்கப்பாதை மற்றும் விமான நிலையத்தில் கடந்த சில நாட்களாகக் குழப்பமான சூழல் நிலவி வருகிறது.
இதனால் தொடக்க ஆட்டத்திற்கு இடையூறு ஏற்படும் என அந்நாடு அரசாங்கம் அஞ்சுகிறது.
மேலும் அந்நகரில் உள்ள மழலையர் பள்ளி முதல் உயர்கல்வி நிறுவனங்கள் வரை தற்காலிகமாக மூடப்படவுள்ளன.
இம்முறை நடைபெறும் 2026-ஆம் ஆண்டு உலகக் கிண்ண காற்பந்து போட்டியை அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் கனடா ஆகிய நாடுகள் ஏற்று நடத்துகின்றன.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)