Ad Banner
Ad Banner
Ad Banner
 அரசியல்

ஜூலை 11ஆம் தேதி ஜோகூரிலும் ஆகஸ்ட் முதலாம் தேதி நெகிரி செம்பிலானிலும் சட்டமன்றத் தேர்தல்கள்

12/06/2026 05:15 PM

புத்ராஜெயா, ஜூன் 12 (பெர்னாமா) -- எதிர்வரும் ஜூலை 11ஆம் தேதி ஜோகூரிலும் ஆகஸ்ட் முதலாம் தேதி நெகிரி செம்பிலானிலும் சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் (எஸ்.பி.ஆர்) நிர்ணயித்துள்ளது.

மாநில தேர்தகளுக்கான முக்கியமான தேதிகள் குறித்து விவாதிக்க தேர்தல் ஆணையம் சிறப்புக் கூட்டத்தை நடத்தியப் பின்னர் இந்தத் தேதிகள் முடிவு செய்யப்பட்டதாக அதன் தலைவர் டத்தோ ஶ்ரீ ரம்லான் ஹரூன் தெரிவித்தார்.

ஜோகூரில் வேட்புமனுத் தாக்கல் ஜூன் 27ஆம் தேதியும், முன்கூட்டியே வாக்களிப்பு ஜூலை 7ஆம் தேதியும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதே வேளையில்,நெகிரி செம்பிலானில் வேட்புமனுத் தாக்கல் ஜூலை 18ஆம் தேதியும், முன்கூட்டியே வாக்களிப்பு ஜூலை 28ஆம் தேதியும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இன்று தேர்தல் ஆணையத் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் ரம்லான் ஹரூன் கூறினார்.

- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: மாலை 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)