Ad Banner
Ad Banner
Ad Banner
 பொது

சபா சிப்பிதாங் சௌதர்ன் மடானி லின்க் திட்டம்; மத்திய அரசாங்கத்தின் அர்ப்பணிப்பை நிரூபிக்கின்றது

13/06/2026 05:34 PM

சிபிதாங், 13 ஜூன் (பெர்னாமா) -- சபா சிப்பிதாங் சௌதர்ன் மடானி லின்க் மின்சார கட்டமைப்புத் திட்டத்தின் செயலாக்கம், அம்மாநிலத்தின் உட்புற பகுதிகளில் உள்ள மக்களும் மேம்பாடு மற்றும் அடிப்படை வசதிகளைப் பெறுவதை உறுதி செய்யும் மத்திய அரசாங்கத்தின் அர்ப்பணிப்பை நிரூபிக்கின்றது.

நாட்டின் வளர்ச்சி பெரிய நகரங்களில் மட்டுமே மையப்படுத்தி இருக்கக் கூடாது.

மாறாக, அவ்வளர்ச்சியின் பலன்கள் நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் சமமாகப் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்றும் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் எடுத்துரைத்தார்.

வளர்ச்சியின் பலன்களை மக்கள் முழுமையாக அனுபவிப்பதை உறுதிசெய்ய, மின்சார விநியோகம் போன்ற அடிப்படை வசதிகள் உட்புறப் பகுதிகளைச் சென்றடைய வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

இன்று, சபாவின் சிப்பிதாங்கில் நடைபெற்ற சபா சிபிதாங் சௌதர்ன் மடானி லின்க் மின்சார கட்டமைப்புத் திட்டத்தின் அடிக்கல் நாட்டு விழாவை அவர் அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார்.

''புதிய வளர்ச்சியை முன்னெடுக்கும் முயற்சிகளில் நாம் கவனம் செலுத்தலாம். ஆனால், அதன் பயன்கள் மாநிலத்தின் அனைத்து பகுதிகளுக்கும் சென்றடையாத வரையில், வேகமாக வளர்ந்து வரும் நகரங்களிலிருந்து மிகவும் தொலைதூர மாவட்டங்கள் வரை அந்த வளர்ச்சியின் அர்த்தம் நிச்சயமாக அடித்தட்டு மக்கள் மீது எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தாது,'' என்றார் அவர்.

இத்திட்டம், சபாவின் மேற்கு மற்றும் கிழக்குக் கடற்கரைகளை இணைக்கும் 275 கிலோவோல்ட் மின்சாரப் பரிமாற்றப் பாதை அமைப்பதை உள்ளடக்கியது.

அது, மாநிலத்தின் ஆற்றல் விநியோகக் கட்டமைப்பை வலுப்படுத்தவும், மின்சார விநியோகத்தைச் சமநிலைப்படுத்தவும் உதவுகிறது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)