Ad Banner
Ad Banner
Ad Banner
 விளையாட்டு

குரோஷியாவைத் தோற்கடித்த இங்கிலாந்து

18/06/2026 06:40 PM

நியூ யார்ஜ், ஜூன் 18 (பெர்னாமா) -- இதனிடையே, L பிரிவில், இங்கிலாந்து 4-2 என்ற கோல் எண்ணிக்கையில் குரோஷியாவைத் தோற்கடித்தது.

ஆட்டம் தொடங்கி 12-வது நிமிடத்தில் வழங்கப்பட்ட பினால்டி வாய்ப்பை ஹேரி கேன் சரியாக பயன்படுத்தி கோல் அடித்து அசத்தியதை அடுத்து, 42-வது நிமிடத்தில் அதற்கான மற்றுமொரு கோலையும் போட்டார்.

அதேபோல குரோஷியா முதல் பாதியில் இரு கோல்கள் அடிக்க ஆட்டம் 2-2 என சமன் ஆனது.

அதே உத்வேகத்துடன் இரண்டாம் பாதியில் களமிறங்கிய இங்கிலாந்து மேலும் இரு கோல்கள் அடித்து தனது வெற்றியை உறுதி செய்தது.

அதேபோல, L பிரிவில், கனடாவின் டொரென்டோ அரங்கில் நடந்த ஆட்டத்தில், கானா 1-0 எனும் நிலையில் பனாமாவை வீழ்த்தியது.

- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: மாலை 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)