நியூ யார்ஜ், ஜூன் 18 (பெர்னாமா) -- 2026 உலகக் கிண்ண காற்பந்து போட்டி..
குழுப் பிரிவு ஆட்டங்களில், இன்று நியூசிலாந்து, போர்த்துகல், கொலம்பியா, உஸ்பெகிஸ்தான் மற்றும் காங்கோ குடியரசு ஆகிய நான்கு நாடுகள் K பிரிவில் பலப்பரீட்சை நடத்தின.
அதில், காங்கோவை வீழ்த்த முடியாமல் கோல் மன்னன் ரொனால்டோ தலைமையிலான போர்த்துகல் 1-1 என சமநிலை கண்டது.
தொடக்கம் முதல் போர்த்துகல் அணி வீரர்கள் ஆட்டத்தில் ஆதிக்கம் செலுத்தினர்.
அதன் பலனாக ஜோவோ நெவ்ஸ் ஆட்டத்தின் 6-வது நிமிடத்தில் கோல் போட, ஆட்டம் 1-0 என போர்த்துகலுக்கு சாதகமாய் முன்னிலையில் இருந்தது.
தொடர்ந்து சிறப்பாக விளையாடிய காங்கோ 45-வது நிமிடத்தில் கோல் அடித்து முதல் பாதியை 1-1 எனும் நிலையில் முடித்தது.
இரண்டாம் பாதியில் இரு அணிகளும் போராடியும் கோல் அடிக்காத நிலையில், இந்த ஆட்டம் குறித்து ரொனால்டோ எக்ஸ் தளத்தில் 'நாம் எதிர்பார்த்த தொடக்கம் அமையவில்லை' என பதிவிட்டுள்ளார்.
மெக்சிகோ சிட்டியில் நடைபெற்ற மற்றோர் ஆட்டத்தில் கொலம்பியா 3-1 எனும் கோல்களில் உஸ்பெகிஸ்தானை தோற்கடித்திருக்கின்றது.
கடந்த 2022-ம் ஆண்டு கட்டாரில் நடந்த உலகக் கிண்ண் தொடரில் கொலம்பிய அணி விளையாடத நிலையில், இந்த வெற்றி ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: மாலை 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)