பாரிஸ், ஜூன் 18 (பெர்னாமா) -- Final Jelajah PSA 2025/2026 ஸ்குவாஷ் போட்டியில், கணித்தது போலவே, தேசிய மகளிர் ஸ்குவாஷ் வீராங்கனை எஸ். சிவசங்கரி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
இன்று காலை நடைபெற்ற காலிறுதி சுற்றில் அவர், ஜப்பானின் சடோமி வதனாபேவை அவர் தோற்கடித்தார்.
இந்த வெற்றியின் மூலம், அவர் 9 போட்டிகளில் 8 முறை வெற்றி பெற்றுள்ளார்
சென்ட்குவாட்ரே-பாரிஸ் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில், சிவசங்கரி, சடோமி வதனாபேயை எந்த சிரமமும் இல்லாமல் எதிர்கொண்டு வெற்றி பெற்றார்.
35 நிமிடங்களில் 11-9, 11-6, 11-9 என மூன்று நேரடி செட்களில் அவர் வெற்றியை பதிவு செய்தார்.
27 வயதுடைய சிவசங்கரி, சனிக்கிழமை அதிகாலை நடைபெறவிருக்கும் அரையிறுதியில் எகிப்தின் அமினா ஓர்ஃபியைச் சந்திக்கவுள்ளார்.
முன்னதாக, அமினா ஓர்ஃபி 11-1, 11-8, 6-11, 11-5 என்ற புள்ளிகளில் பெல்ஜிய வீரானையை 57 நிமிடங்களில் வீழ்த்தினார்,
- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: மாலை 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)