Ad Banner
Ad Banner
Ad Banner
 பொது

புதிய மலாய் அரசியல் கட்சி உருவாக்கப்படுவது வரவேற்கத்தக்கது

14/06/2026 04:42 PM

ஜோகூர் பாரு, 14 ஜூன் (பெர்னாமா) --  எந்தவொரு புதிய மலாய் அரசியல் கட்சியும் உருவாக்கப்படுவது வரவேற்கத்தக்கது.

ஆனால், அது இன மற்றும் மத ஒற்றுமையில் பிளவை ஏற்படுத்தாது என்று தாம் நம்புவதாக தேசிய முன்னணி தலைவர் டத்தோ ஶ்ரீ டாக்டர் அஹ்மாட் சாஹிட் ஹமிடி தெரிவித்தார்.

எந்தவொரு தனிநபரோ அல்லது பிரமுகரோ ஒரு புதிய அரசியல் தளத்தை நிறுவும்போது ​​அது மலாய் மக்களின் சிந்தனையை ஒன்றிணைப்பதை நோக்கமாகக் கொண்டிருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

''நாம் நமது எண்ணங்களை ஒன்றிணைப்பதோடு, தொடர்ந்து பிளவுபட்டு இருக்காமல் இருக்கும் பட்சத்தில் எந்தவொரு தனிநபரையோ அல்லது பிரமுகரையோ நாங்கள் வரவேற்கிறோம். நமது சக குடிமக்களும், எந்தத் தளத்தைப் பயன்படுத்தினாலும், தேசிய செயல்திட்டம், இஸ்லாமிய செயல்திட்டம் மற்றும் தேசத்தின் பிள்ளைகளின் செயல்திட்டம் ஆகியவற்றில் நமது செயல்களை நாம் இறுதியாக ஒன்றிணைத்தால்​ எங்களால் ஆதரவளிக்க முடியும்'', என்றார் அவர்.

மலாய்-இஸ்லாமியப் போராட்டத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு புதிய கட்சி உருவாக்கப்படுவது குறித்துக் கருத்து தெரிவிக்கும்போது டத்தோ ஶ்ரீ டாக்டர் அஹ்மாட் சாஹிட் இவ்வாறு கூறினார்.

சனிக்கிழமை, RESET இயக்கத்தின் தோற்றுநர் டத்தோ ஶ்ரீ ஹம்சா சைனூடின், தேசிய தொலைநோக்குக் கட்சி நிறுவப்பட்டதை அறிவித்தார்.

அக்கட்சியின் முதல் ஆண்டுக் கூட்டம் அடுத்த வாரம் நடைபெற உள்ளது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)