மங்கத்தால், 14 ஜூன் (பெர்னாமா) -- நாடு தழுவிய அளவில், ஜூன் 13ஆம் தேதி வரை டெங்கி சம்பவங்களின் எண்ணிக்கை, கடந்தாண்டு இதே காலக்கட்டத்தில் பதிவான 27,640 சம்பவங்களைக் காட்டிலும் 20.7 விழுக்காடு அதிகரித்து 33,367-ஆக பதிவாகி உள்ளது.
சபாவில் கடந்தாண்டு இதே காலகட்டத்தில் 1,905 ஆக இருந்த டெங்கி சம்பவங்களின் எண்ணிக்கை, இவ்வாண்டு 50.4 விழுக்காடு அதிகரித்து 2,866 ஆகப் பதிவாகியுள்ளது, கவலையளிப்பதாக சுகாதார அமைச்சர் டத்தோ ஶ்ரீ டாக்டர் சுல்கிஃப்ளி அஹ்மாட் தெரிவித்தார்.
''ஒவ்வொரு 4, 5 வருடங்களுக்கும் வரும் கணிப்புகளில் இது நமக்குத் தெரியும். அந்த திடீர் அதிகரிப்பை நீங்கள் பார்க்கிறீர்கள். அது நமக்குத் தெரியும். ஆனால், அது கையாளப்படுவதையும் எதிர்கொள்ளப்படுவதையும் நாங்கள் உறுதிப்படுத்த விரும்புகிறோம்'', என்றார் அவர்.
முன்னதாக அவர், சபாவில் உள்ள மங்கத்தால் சமூக மண்டபத்தில் 2026 தேசிய ஆரோக்கியமான மலேசியா செயல்திட்டம், எ.என்.எம்.எஸ் பிரச்சாரத்துடன் இணைந்து நடைபெற்ற தேசிய அளவிலான ஆசியான் டெங்கி தினம், உலக மலேரியா தினம் மற்றும் Mega Gotong-Royong ஆகிய நிகழ்ச்சிகளுக்குத் தலைமை தாங்கினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)