Ad Banner
Ad Banner
Ad Banner
 பொது

செரெண்டாவில் தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் மூன்று பேருந்துகள் சேதம்

14/06/2026 05:15 PM

உலு சிலாங்கூர், 14 ஜூன் (பெர்னாமா) -- செரெண்டாவில் உள்ள தாமான் மெலாத்தி கியாம்பாங்கில் உள்ள வணிக டிரக் பொருத்தும் தொழிற்சாலையில் இன்று அதிகாலை மூன்று தொழிலாளர் பேருந்துகள் தீக்கிரையாகின.

இந்தத் தீ விபத்தில் யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை என்றும், சம்பந்தப்பட்ட தொழிற்சாலை கட்டிடத்தின் கட்டமைப்பு பாதிக்கப்படவில்லை என்றும் சிலாங்கூர் மாநில மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை, JBPM-இன் நடவடிக்கைப் பிரிவு உதவி இயக்குநர் அஹ்மாட் முக்லிஸ் முக்தார் கூறினார்.

இச்சம்பவம் குறித்து, அதிகாலை மணி 2.42க்கு தீயணைப்புத் துறைக்கு அவசர அழைப்புக் கிடைத்ததாகவும், அதைத் தொடர்ந்து கோலா குபு பாரு மற்றும் புக்கிட் செந்தோசாவின் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்திலிருந்து 10 பணியாளர்களும் தீயணைப்பு இயந்திரங்களும் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

11 நிமிடங்கள் கழித்து சம்பவ இடத்தை வந்தடைந்த தீயணைப்பு வீரர்கள், மூன்று வாகனங்களிலும் வேகமாக எரிந்துகொண்டிருந்த தீயை அணைத்தனர்.

தீயணைப்பு வீரர்கள் விரைந்து செயல்பட்டு தீயை அணைத்ததால், அதிகாலை மணி 3.08 அளவில் தீ முழுமையாகக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)