அமெரிக்கா, ஜூன் 15 (பெர்னாமா) -- அமெரிக்கா - ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளதாக இரு நாடுகளும் உறுதி செய்துள்ளன.
இதன் மூலம் இருதரப்பு மோதல்கள் முடிவுக்கு வருவதுடன் மூடப்பட்டிருந்த ஹோர்முஸ் நீரிணை மீண்டும் திறக்கப்படவுள்ளது.
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான் அமைதி ஒப்பந்தம் தற்போது முழுமையடைந்துள்ளதாக அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
மேலும், வரும் வெள்ளிக்கிழமை இந்த ஒப்பந்தம் அதிகாரப்பூர்வமாகக் கையெழுத்திடப்பட்டவுடன் ஹோர்முஸ் நீரிணை மீண்டும் திறக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஹோர்முஸ் நீரிணையை எவ்வித கட்டணமும் இன்றி பயன்படுத்தவும் அங்கு ஏற்படுத்தப்பட்டிருந்த அமெரிக்க கடற்படையின் முற்றுகையை உடனடியாக விலக்கிக் கொள்ளவும் தாம் உத்தரவிடுவதாகவும் அவர் பதிவிட்டுள்ளார்.
இதனிடையே, அமெரிக்கா மற்றும் ஈரான் அமைதி ஒப்பந்தத்திற்கான அதிகாரப்பூர்வ கையெழுத்திடும் நிகழ்ச்சி, வரும் ஜூன் 19-ஆம் தேதி சுவிட்சர்லாந்தில் நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது என்று பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் தமது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)