Ad Banner
Ad Banner
Ad Banner
 உலகம்

அமெரிக்கா மிசூரியில் விமான விபத்து: 12 பேர் பலி

15/06/2026 05:14 PM

மிசூரி, ஜூன் 15 (பெர்னாமா) -- அமெரிக்காவின் மிசூரி மாநிலத்தில் உள்ள பட்லர் எனும் நகரில் ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த இலகு ரக விமான விபத்தில் 12 பேர் உயிரிழந்தனர்.

Butler Memorial  விமான நிலையத்திற்கு அருகே இந்த விபத்து நிகழ்ந்ததாக மிசூரி மாநில நெடுஞ்சாலை ரோந்துப் படை உறுதிப்படுத்தியுள்ளது. 

ஒரு விமானி உட்பட, வானிலிருந்து குதித்து சாகசம் செய்பவர்கள் 11 பேர் இவ்விவிபத்தில் உயிரிழந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

விபத்து நிகழ்ந்த பட்லர் நகரம், மிசூரியின் கன்சாஸ் நகரத்திலிருந்து தெற்கே சுமார் 60 மைல் தொலைவில் அமைந்துள்ளது. 

விபத்துக்கான காரணத்தை கண்டறிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)