கோலாலம்பூர், 15 ஜூன் (பெர்னாமா) -- வரும் 2026 ஜூலை முதலாம் தேதி தொடங்கி தானியங்கி பணம் பட்டுவாடா இயந்திரம், ஏ.டி.எம் மற்றும் ஸ்மார்ட் மறுசுழற்சி இயந்திரம், எஸ்.ஆர்.எம் மூலமாக ஒரு ரிங்கிட் கட்டணமின்றி, மலேசியாவில் உள்ள அனைத்து வங்கிகளின் வாடிக்கையாளர்களும் பணத்தை எடுத்துக்கொள்ளலாம்.
இந்த முயற்சியின் மூலம் வங்கி அட்டை வைத்திருப்பவர்கள் தங்களுக்கு அட்டை வழங்கிய வங்கி எதுவாக இருந்தாலும், நாடு முழுவதிலும் உள்ள 14,000-க்கும் மேற்பட்ட ஏ.டி.எம் மற்றும் எஸ்.ஆர்.எம் இயந்திரங்களைப் பயன்படுத்தி எவ்விதக் கட்டுப்பாடுகளுமின்றி இலவசமாகப் பணத்தை எடுத்துக் கொள்ளலாம்.
மலேசிய வங்கிகளின் சங்கம், ஏ.பி.எம், மலேசிய இஸ்லாமிய வங்கி மற்றும் நிதி நிறுவனங்களின் சங்கம்,AIBIM மற்றும் மலேசிய மேம்பாட்டு நிதி நிறுவனங்களின் சங்கம், ADFIM ஆகியவை இணைந்து வெளியிட்ட கூட்டறிக்கையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மலேசியாவில் உள்ள வங்கிகளால் இயக்கப்படும் ஏ.டி.எம் மற்றும் எஸ்.ஆர்.எம் இயந்திரங்களுக்கு இந்தக் கட்டண விலக்கு பொருந்தும் என்று அந்தச் சங்கங்கள் குறிப்பிட்டுள்ளன.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)