டெக்சஸ், 15 ஜூன் (பெர்னாமா) -- அமெரிக்காவின் டெக்சஸ் அரங்கில் நடைபெற்ற F பிரிவுக்கான தொடக்க ஆட்டத்தில் மோதிய ஜப்பானும் நெதர்லாந்தும் 2-2 என் சமன் கண்டன.
இந்த முடிவின் வழி உலகக் கிண்ண காற்பந்து போட்டியில் குழுப் பிரிவினால 16 ஆட்டங்களில் தோல்வியடையாத தனது சாதனையை நெதர்லாந்து தொடர்கிறது.
முதல் பாதியில் ஜப்பானும் நெதர்லாந்தும் கோல் ஏதும் அடிக்காத நிலையில், இரண்டாம் பாதி ஆட்டதின் விறுவிறுப்பு அதிகமானது.
நெதர்லாந்தின் கேப்டன் விர்ஜில் வான் டிஜ்க் ஆட்டத்தின் 51-வது நிமிடத்தில் கோல் அடித்த சில நிமிடங்களில் ஜப்பானும் தனக்கான முதல் கோலை 57-வது நிமிடம் போட்டது.
பின்னர் மீண்டும் 64-வது நிமிடம் நெதர்லாந்து இரண்டாம் கோல் அடித்து 2-1 எனும் நிலையில் முன்னிலை வகித்தது.
ஆயினும், போராடும் குணத்தை வெளிப்படுத்தி ஜப்பான் 89-வது நிமிடத்தில் கோல் அடித்து ஆட்டத்தை சமன் செய்தது.
அதேபோல, F பிரிவின் மற்றோர் ஆட்டத்தில் சுவீடன் 5-1 எனும் கோல் எண்ணிக்கையில் துனிசியாக அதிரடியாக தோற்கடித்திருக்கின்றது.
முதல் பாதியில் இரு கோல்கலைப் போட்ட சுவீடன் எஞ்சிய மூன்று கோல்களை இரணடாம் பாதி ஆட்டத்தில் அடித்தது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)