Ad Banner
Ad Banner
Ad Banner
 பொது

போலி மருத்துவ விடுப்புச் சீட்டு விற்பனை: தாதி உட்பட ஐவருக்கு தடுப்புக் காவல்

16/06/2026 05:09 PM

பெக்கான், 16 ஜூன் (பெர்னாமா) -- செல்லுபடியாகாத மருத்துவ விடுப்புச் சீட்டுகளை வாங்கிய மற்றும் விற்ற விவகாரம் தொடர்பாக, தாதி ஒருவர் உட்பட ஐந்து நபர்கள் இன்று தொடங்கி மூன்று முதல் நான்கு நாள்கள் வரை போலீஸ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த மோசடிச் சம்பவம் குறித்து மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைக்கு உதவும் வகையில் அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குற்றவியல் சட்டம் செக்‌ஷன் 420 மற்றும் அதே சட்டம் செக்‌ஷன் 468 ஆகியவற்றின் கீழ் போலீசார் விசாரணையை மேற்கொள்வதற்கு, 33 முதல் 55 வயதுக்கு உட்பட்ட அச்சந்தேக நபர்களுக்கு எதிரான தடுப்புக் காவல் உத்தரவை, பெக்கான் மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மஜிஸ்திரேட் மெலடி வூன் சி முன் பிறப்பித்தார்.

நேற்று பிற்பகல் 3 மணி முதல் இரவு 10 மணி வரை, கம்பொங் மர்ஹூம் (Kampung Marhum) மற்றும் கம்பொங் கோலா பகாங் (Kampung Kuala Pahang) ஆகிய பகுதிகளில் நடத்தப்பட்ட அதிரடி நடவடிக்கையின் போது அச்சந்தேக நபர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டதாக பெக்கான் மாவட்ட போலீஸ் தலைவர் சுப்ரின்டென்டன் முஹமட் சைடி மாட் ஜின் தெரிவித்தார்.

முதற்கட்ட விசாரணையின்படி, இந்த போலி மருத்துவ விடுப்புச் சீட்டுகள் ஒவ்வொன்றும் தலா 50 ரிங்கிட் முதல் 200 ரிங்கிட் வரையில் விற்கப்பட்டதாக நம்பப்படுகிறது என்று அவர் கூறினார்.

வாடிக்கையாளர்களைத் தேடிக் கண்டுபிடிப்பதற்கும், இந்த போலி மருத்துவ விடுப்புச் சீட்டுகளின் விற்பனையை நிர்வகிப்பதற்கும் சில தனிநபர்கள் இடைத்தரகர்களாகச் செயல்பட்டு வந்துள்ளனர் என்பதும் தெரியவந்துள்ளது.


-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502