பட்டர்வெர்த், 20 ஜூன் (பெர்னாமா) -- அடுத்து நடத்தப்படும் ஒவ்வொரு தேசிய ஊடகவியலாளர் தினம், ஹவானா கொண்டாட்டத்தின்போதும் ஊடக ஆர்வலர்களுடன் இணைந்து கலந்துரையாடல் அமர்வை ஏற்பாடு செய்யுமாறு மலேசிய ஊடக மன்றம், எம்.எம்.எம்-க்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஊடகத் துறையிடமிருந்து, கருத்துகள், ஆலோசனைகள் மற்றும் பரிந்துரைகளை சேகரித்து, அவற்றை அரசாங்கத்திடம் கொண்டு சேர்க்கும் பிரதான தளமாக, எம்.எம்.எம் செயல்பட வேண்டும் என்று தொடர்பு அமைச்சர் டத்தோ ஃபஹ்மி ஃபட்சில் தெரிவித்தார்.
''பிரதான ஊடகங்களால் உருவாக்கப்பட்டு, சமூக ஊடகங்களில் வெளியிடப்படும் உள்ளடக்கத்தின் அளவு, பார்வைகளின் எண்ணிக்கை அல்லது தகவல்களைப் பெறும் வாசகர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, சமூக ஊடகத் தளங்கள் ஊதியத்தையோ அல்லது பணத்தையோ வழங்கி உதவாமல், அதனை அத்தளங்களில் மட்டும் வெளியிடுகிறது,'' என்றார் அவர்.
செய்தி உள்ளடக்கத்திற்கான வருவாய் ஈட்டுதல் உள்ளிட்ட நியாயமான வழிமுறைகளைக் கண்டறிவதற்காக, எம்.எம்.எம் மற்றும் சமூக ஊடகத் தளங்களுக்கு இடையே மேலும் தீவிரமான கலந்துரையாடல்கள் நடத்தப்பட வேண்டிய அவசியத்தை அந்நிலைமை புலப்படுத்துவதாகவும் அவர் சுட்டிக் காட்டினார்.
இன்று, பட்டர் வெர்த்தில் ஹவானா 2026-ஐ முன்னிட்டு தொடர்பு அமைச்சர் மற்றும் ஊடகத் தளங்களுடன் நடத்தப்பட்ட கலந்தாலோசிப்பு நிகழ்ச்சிக்குப் பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய டத்தோ ஃபஹ்மி அதனைக் கூறினார்.
தகவல் மற்றும் ஊடக மேம்பாட்டு ஒத்துழைப்பு குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதன் மூலம் மலேசியாவும் கம்போடியாவும் இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தியுள்ளன.
அது, ஊடகம் மற்றும் தகவல் தொடர்பின் பல்வேறு துறைகளில் நெருங்கிய ஒத்துழைப்புக்கு வழிவகுத்துள்ளது.
கம்போடியா தகவல் அமைச்சர் நெத் பிக்ட்ரா சார்பாக, அதன் பொதுச் செயலாளர் பிராக் தவேக் அமிடாவும் ஃபஹ்மியும், இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் பொது வாக்கெடுப்புக்காகக் கையெழுத்திட்டனர்.
--பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]