Ad Banner
Ad Banner
Ad Banner
 பொது

பிள்ளைகள் பகடிவதை செயலில் ஈடுபட்டால் பெற்றோரும் இனி சட்டப்பூர்வ பொறுப்பேற்க வேண்டும்

16/06/2026 05:18 PM

கோலாலம்பூர், 16 ஜுன் (பெர்னாமா) -- 2026 ஆம் ஆண்டின் பகடிவதை எதிர்ப்பு சட்டம், குடும்பங்களுக்கான ஒன்றிணைந்த கடப்பாடு என்ற கருத்தை அறிமுகப்படுத்துவதால், தங்களின் பிள்ளைகள் பகடிவதை செயலில் ஈடுபட்டதாகக் கண்டறியப்பட்டால், பெற்றோர்களும் இனி சட்டப்பூர்வமாகப் பொறுப்பேற்க வேண்டியிருக்கலாம்.

பகடிவதை குற்றத்திற்கான பொறுப்பை குற்றவாளியைத் தாண்டி குடும்ப உறுப்பினர்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டிருப்பது, சம்பந்தப்பட்ட சட்டத்தின் முக்கிய சீர்திருத்தங்களில் ஒன்றாகும் என்று சட்ட மற்றும் கழகச் சீர்திருத்தத்திற்கான பிரதமர் துறை அமைச்சர், டத்தோ ஶ்ரீ அசாலினா ஒத்மான் சைட் தெரிவித்தார்.

''நாங்கள் பெற்றோர்கள் மீதும் பொறுப்பைச் சுமத்துகிறோம். அதுதான் இந்தச் சட்டத்தின் வித்தியாசம். ஒரு சாதாரண குற்றவியல் வழக்கைப் பார்த்தால், குற்றம் செய்தவர் மீது மட்டுமே பொறுப்பு இருக்கும். ஆனால், எங்கள் சட்டமான, பகடிவதைக்கு எதிரான சட்டத்தில், நாங்கள் பொறுப்புக்கான ஒரு பிரிவைச் சேர்த்துள்ளோம். எனவே, அபராதம் செலுத்துவது போன்ற விஷயங்களும் குடும்பத்தையும் உள்ளடக்கி இருக்கும். ஆக, நாங்கள் பொறுப்பையும் மாற்றுகிறோம், அல்லது பொறுப்பைக் குடும்பத்துடன் இணைக்கிறோம்,'' என்றார் அவர்.

இன்று ஆசிய அனைத்துலக நடுவர் மையம், ஏ.ஐ.ஏ.சி-இல் பகடிவதைக்கு எதிரான நடுவர் மன்ற தலைமையகத்தைத் தொடக்கி வைத்த பின்னர் அவர் இவ்வாறு கூறினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)