ஈப்போ, 16 ஜூன் (பெர்னாமா) -- இதற்கு முன்னர், ஆண்டுக்கு ஒரு லட்சத்து 70,000 ஆக இருந்த கோரிக்கை விகிதம், ஆண்டுக்கு 200 விழுக்காடு வரை அதிகரிக்கும் என்று சமூகப் பாதுகாப்பு அமைப்பு, பெர்கேசோ எதிர்பார்க்கிறது.
தற்போது திட்டமிடப்பட்டு வரும் லிண்டுங் 24 ஜாம், 2025ஆம் ஆண்டு கிக் தொழிலாளர்கள் சட்டம் மற்றும் பயணித் திட்டம் போன்ற பாதுகாப்புத் திட்டங்களை அமல்படுத்துவதற்கு ஏற்ப இந்த உயர்வு கணிக்கப்பட்டுள்ளதாக மனிதவள அமைச்சர் டத்தோ ஶ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.
'இந்த திடீர் தேவை அதிகரிப்பு, மேலும் ஆற்றல்மிக்க மற்றும் ஒருங்கிணைந்த மறுவாழ்வு சேவைத் திறனைக் கோருகிறது. எனவே, இந்த மையத்தின் மேம்பாட்டின் மூலம், தொழில்நுட்ப முன்னேற்றங்கள் மற்றும் மிகவும் ஆற்றல்மிக்க மறுவாழ்வு அணுகுமுறையின் தேவைக்கு ஏற்ப, பெர்கேசோ நாட்டின் மறுவாழ்வுச் சூழலை மாற்றியமைக்கும்,'' என்றார் அவர்.
இன்று சுல்தான் நஸ்ரின் ஷா மேரு ராயா பெர்கேசோ மறுவாழ்வு மையத்தின் திறப்பு விழாவில் உரையாற்றிய ரமணன் இவ்வாறு தெரிவித்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)