Ad Banner
Ad Banner
Ad Banner
 உலகம்

லாஸ் ஏஞ்சலஸில் உள்ள கிடங்கின் கூரையில் தீ; மக்கள் வெளியேற்றம்

18/06/2026 06:15 PM

லாஸ் ஏஞ்சலஸ், ஜூன் 18 (பெர்னாமா) -- அமெரிக்கா, லாஸ் ஏஞ்சலஸ் நகரின் மையப் பகுதியில் உள்ள ஒரு பெரிய கிடங்கின் கூரையில் இருந்து நேற்று, தீப்பிழம்புகள் வேகமாக பரவியதைத் தொடர்ந்து, அப்பகுதியில் வசிக்கும் மக்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.

சம்பந்தப்பட்ட கட்டிடத்தின் சூரிய மின் தகடுகள் முழுவதும் தீ வேகமாக பரவியதுடன், அடர்த்தியான புகை மற்றும் அம்மோனியா வாயு வெறியேறியதால் அங்குள்ள குடியிருப்பாளர்கள் பாதுகாப்பான இடங்களில் தங்குமாறு உத்தரவிடப்பட்டது.

நேற்று மாலை சுமார் 2.30 மணிக்கு, லாஸ் ஏஞ்சலஸ் நகரின் வரலாற்றும் சிறப்புமிக்க பாய்ல் ஹைட்ஸ் நெய்பர்ஹூட் பகுதியில் அமைந்துள்ள 5 லட்சம் சதுர அடி பரப்பளவு கொண்ட லைனேஜ் நிறுவனத்தின் கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டது.

பூட்டி வைக்கப்பட்டிருந்த அம்மோனியா குழாயைக் கடந்து தீப்பிழம்புகள் பரவினாலும், அதன் முதன்மை கூரை முழுவதும் எரிந்ததாக லாஸ் ஏஞ்சலஸ் தீயணைப்பு துறை தலைவர் ஜேய்ம் மோர் கூறினார்.

தீயை அணைக்கும் நடவடிக்கைக்காக ஹெலிகாப்டர் பயன்படுத்தப்பட்ட நிலையில், வெற்றிகரமாக தீயைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டதாக, அவர் கூறினார்.

இதில், யாருக்கும் எவ்வித காயங்களும் ஏற்படவில்லை.

- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: மாலை 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)