ஜோகூர் பாரு, ஜூன் 19 (பெர்னாமா) -- ஜோகூர் மற்றும் நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தல்களுக்கான கெஅடிலான் கட்சி வேட்பாளர் பட்டியல் தற்போது 99 விழுக்காடு இறுதி செய்யப்பட்டுள்ளது.
ஜோகூரில் உள்ள மாநில சட்டமன்றத் தொகுதிகளில், 20-திலும், நெகிரி செம்பிலானில் உள்ள 16 தொகுதிகளிலும் தங்கள் கட்சி போட்டியிடும் கெஅடிலான் கட்சியின் பொதுச்செயலாளர் டத்தோ டாக்டர் ஃபுசியா சாலே தெரிவித்தார்.
அதோடு, வேட்பாளர்களின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு அடுத்த சில நாட்களில் வெளியிடப்படும் என்றும் அவர் கூறினார்.
"ஆகவே, முதியவர்கள், புதியவர்கள், பெண்கள் மற்றும் இளைஞர்கள் என ஒரு சமச்சீராக அமையும். பின்னர் வெளியிடப்படும் அறிவிப்பிற்காகக் காத்திருங்கள்," என்றார் அவர்.
புத்ரி வங்சா சட்டமன்றத்திற்கு எதிரான ஜோகூர் அமானாவின் கோரிக்கைக் குறித்து கருத்து தெரிவித்த Datuk Dr Fuziah, சம்பந்தப்பட்டத் தொகுதித் தகராறு பிரச்சினை தீர்க்கப்படுவதற்காக கூட்டணிக் கட்சிகளின் உயர்மட்டத் தலைமைத்துவத்திடம் முழுமையாக ஒப்படைக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.
அந்தத் தொகுதியை கெஅடிலான் கட்சிக்கு வழங்க தாம் ஒப்புக் கொள்ளவில்லை என்று ஜோகூர் அமானா துணைத் தலைவர் ஃபுசியா சாலே அறிக்கை வெளியிட்டதைத் தொடர்ந்து இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது..
- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: மாலை 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)