ஜோகூர் பாரு, ஜூன் 19 (பெர்னாமா) -- ஜோகூர் மாநிலத் தேர்தலை முன்னிட்டு, Keretapi Tanah Melayu நிறுவனம் KTMB (கே.தி.எம்.பி) தெற்குப் பகுதிகளுக்கு செல்ல கூடுதல் மின்சார ரயில், ETS (ஈ.டி.எஸ்) சேவையை வழங்கி வருகிறது.
இன்று நண்பகல் மணி 12 முதல், கே.தி.எம்.பி செயலி, KITS Style, online.ktmb.com.my என்ற இணையதளம் அல்லது கே.தி.எம்.பி டிக்கெட் இயந்திரங்கள் வழியாக டிக்கெட் விற்பனை தொடங்கியதாக கே.தி.எம்.பி அறிவித்துள்ளது.
ஜூலை 10 முதல் 12-ஆம் தேதி வரை பயணிகளுக்காகக் கூடுதல் ஈ.டி.எஸ் சேவை வழங்கப்படுவதாக கே.தி.எம்.பி தனது முகநூல் பதிவில் தெரிவித்துள்ளது.
ஜூன் முதலாம் தேதி மாநில சட்டமன்றம் கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஜோகூர் மாநிலத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஜூலை 11-ஆம் தேதி நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் முன்னதாக அறிவித்திருந்தது.
- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: மாலை 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)