Ad Banner
Ad Banner
Ad Banner
 உலகம்

தோக்கியோ, ஆரம்பப்பள்ளியில் தீ விபத்து; ஆசிரியர்கள் & மாணவர்கள் காயம்

19/06/2026 03:28 PM

தோக்கியோ, 19 ஜூன் (பெர்னாமா) -- இன்று, ஜப்பான், தோக்கியோவில் உள்ள ஆரம்பப்பள்ளி ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டது.

இதில், குறைந்தது எட்டு மாணவர்களும் இரண்டு ஆசிரியர்களும் காயமடைந்தனர்.

கீத்தா வார்ட் பகுதியில் உள்ள அப்பள்ளியில் புகை சுவாசித்ததால் பெரும்பாலான மாணவர்கள் சிறு காயங்களுக்கு ஆளாகினர்.

காலை மணி 11 அளவில் தீ விபத்து குறித்த அவசர அழைப்பு வந்ததாக உள்ளூர் தீயணைப்பு தரப்பு தெரிவித்தது.

பள்ளிக் கட்டிடத்தின் நான்காவது மாடியில் உள்ள இசை அறையில், முதலில் தீப்பற்றியது.

அப்பள்ளியில் சுமார் 340 மாணவர்கள் பயில்கின்றனர்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)