Ad Banner
Ad Banner
Ad Banner
 உலகம்

தாக்குதலில் உயிரிழந்த மாலுமிக்கு பொதுமக்கள் இறுதி மரியாதை

19/06/2026 03:53 PM

இமாச்சல் பிரதேஷ், 19 ஜூன் (பெர்னாமா) -- ஓமனில் உள்ள DUQM துறைமுகத்தில் நங்கூரமிட்டிருந்த எண்ணெய் கப்பல் மீது அமெரிக்க இராணுவம் நடத்திய தாக்குதலில் உயிரிழந்த இந்திய மாலுமியின் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்துவதற்காக, நேற்று இந்தியா, ஹமீர்பூரில் பொதுமக்கள் கூடினர்.

எம்டி செட்டபெல்லோ எண்ணெய் கப்பலை தடுத்து நிறுத்தும் நோக்கில் அமெரிக்கா நடத்திய தாக்குதலில், இந்தியாவைச் சேர்ந்த மூன்று மாலுமிகள் உயிரிழந்தனர்.

உயிரிழந்தவர்கள் மாலுமி பயிற்சியாளர் ஆதித்யா ஷர்மா, இயந்திர பராமரிப்பு தொழில்நுட்ப நிபுணர் சிவானந்த் சௌராசியா மற்றும் தலைமை பொறியாளர் பட்னாலா சுரேஷ் என்று இந்திய அதிகாரிகள் அடையாளம் கண்டுள்ளனர்.

இந்நிலையில், உயிரிழந்தோருக்கு இறுதி மரியாதை செலுத்தும் நிகழ்வில் கலந்து கொண்ட இந்திய முன்னோக்கு மாலுமிகள் சங்கத்தின் துணைச் செயலாளர் ஜேக்கப் கிளின்ட், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தேவையான அனைத்து ஆதரவுகளும் வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

மேலும், இத்தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிப்பதோடு, உயிரிழந்த மாலுமிகளின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குமாறு இந்திய அரசாங்கத்திற்கு அச்சங்கம் கோரிக்கை வைத்தது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)