Ad Banner
Ad Banner
Ad Banner
 பொது

'நேர்மையான ஊடகம், நம்பகத்தன்மையின் அடித்தளம்' - ஹவானா 2026 கருப்பொருள்

19/06/2026 04:10 PM

பட்டர்வெர்த், 19 ஜூன் (பெர்னாமா) --  சமூகத்தின் அனைத்துத் தரப்பினருக்கும் பொருத்தமானதாகவும், முதன்மையான மற்றும் நம்பகத்தன்மைக் கொண்ட ஆதாரமாகவும் ஊடகத் துறை தொடர்ந்து விளங்குவதை உறுதி செய்வதில், " நேர்மையான ஊடகம், நம்பகத்தன்மையின் அடித்தளம்'' என்று 2026-ஆம் ஆண்டு தேசிய ஊடகவியலாளர் தினம், ஹவானாவின் கருப்பொருள் அமைந்துள்ளது.

ஏனெனில், ஊடக நிறுவனத்தின் நம்பகத்தன்மையை உயர்த்துவதற்கான முக்கிய அம்சங்களில் ஒன்றாக ஒவ்வோர் ஊடகவியலாளரும் தங்கள் செய்தி வழங்கும் முறையில் நேர்மையை நிலைநாட்ட வேண்டும் என்று பெர்னாமா தலைமை நிர்வாக அதிகாரி டத்தின் படுக்கா நூருல் அஃபிடா கமாலுடின் தெரிவித்தார்.

''இந்த நேர்மை என்பது உண்மையில் ஊடகத் துறையின் நெறிமுறைக் கோட்பாட்டின் ஒரு பகுதியாகும். நமது கடமைகளை நேர்மையுடன் நிறைவேற்றும்போது ​​நமக்கு ஒரு பெரும் பொறுப்பு ஏற்படுகிறது. ஆகவே, இங்குதான் 'நம்பகத்தன்மை' என்ற சொல் வருகிறது. நம்மிடம் நேர்மை இருக்கும்போது, ​​நம்பகத்தன்மையும் இருக்கும். நமது அமைப்பு, நமது ஊடக நிறுவனம் உயர்வாக மதிக்கப்படும். மேலும், அவர்கள் சமூகத்தின் நம்பிக்கையைப் பெறுவார்கள்'', என்றார் அவர்.

இன்று, பினாங்கில் பெர்னாமா தொலைக்காட்சியின் தயாரிப்பில் உருவான Program Apa Khabar Malaysia @ HAWANA எனும் நிகழ்ச்சியின் பிரமுகராக கலந்துக் கொண்ட 2026 ஹவானா செயற்குழுத் தலைவருமான நூருல் அஃபிடா அவ்வாறு கூறினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)