Ad Banner
Ad Banner
 உலகம்

நேபாளத்தில் அனைத்துலக யோகா தினக் கொண்டாட்டம்

22/06/2026 04:15 PM

நேபாளம், 22 ஜூன் (பெர்னாமா) --  நேபாளம், காத்மாண்டுவில் உள்ள பக்தாபூர் தர்பார் சதுக்கத்தில், ஞாயிற்றுக்கிழமை அனைத்துலக யோகா தினக் கொண்டாட்டங்கள் விமரிசையாக நடைபெற்றன.

இதில் நூற்றுக்கணக்கான நேபாள மக்களும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளும் திரளாக கலந்து கொண்டனர்.

அனைத்துலக யோகா தினத்தை அனுசரிக்கும் விதமாக இதமான இசையின் பின்னணியில் பழமையான கட்டிடக்கலை வளாகத்தின் முன்புறம் மூச்சுப் பயிற்சிகள் உட்பட இதர பிற யோகாசனங்களை மக்கள் மேற்கொண்டனர்.

ஐக்கிய நாடுகள் சபையின் 69-வது அமர்வில் 2014 ஆம் ஆண்டு ஜூன் 21 ஆம் தேதியை அனைத்துலக யோகா தினமாக அறிவிக்கப்பட்டது.

உடல் மற்றும் மன நலனை மேம்படுத்துவதில் யோகாவின் பங்கு குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இத்தினத்தின் நோக்கமாகும்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)