Ad Banner
Ad Banner
 உலகம்

தமிழ்நாட்டில் இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு; ஐவர் பலி

22/06/2026 04:25 PM

திருவள்ளூர், 22 ஜூன் (பெர்னாமா) --  தமிழ்நாட்டின், திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே தனியாருக்குச் சொந்தமான இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் ஏற்பட்ட அமோனியா வாயு கசிவால் ஐவர் உயிரிழந்துள்ளனர்.

மேலும், 70-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று காலை வழக்​கம்​போல சுமார் 120 தொழிலா​ளர்​கள் பணி​யில் ஈடு​பட்​டிருந்த​போது, குளிர்​சாதனப் பிரி​வில் 
பயன்​படுத்​தப்படும் அமோனியா வாயு கசிந்​துள்​ளது.

சில நிமிடங்​களில் தொழிற்​சாலை முழு​வதும் வாயு பரவிய​தால் தொழிலாளர்களுக்கு மூச்​சுத் திணறல், கண் எரிச்​சல் ஏற்பட்டுள்ளது.

இவ்விவகாரம் தமிழக சட்டமன்றத்திலும் எதிரொலித்த நிலையில், மாநில தொழிலாளர் நலத்துறை அமைச்சர் முகமது பர்வேஷ் விளக்கம் அளித்தார்.

மொத்தம் 74 தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டதில் 70 பேர் பெண்கள் என்றும் இதுவரை 5 பெண்கள் உயிரிழந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

சிலரது உடல்நிலை கவலைக்கிடமாக இருந்தாலும், அச்சப்படும் அளவுக்கு இல்லை என்றும் சுகாதார அமைச்சு கூறியுள்ளது.

இதனிடையே, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், உயிரிழந்த தொழிலாளர்களின் உடல்கள் அரசு செலவில் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)