Ad Banner
Ad Banner
 உலகம்

லக்னோவில் வணிகக் கட்டிடத்தில் தீ; 14 பேர் பலி

24/06/2026 06:29 PM

லக்னோ, 24 ஜூன் (பெர்னாமா) -- வட இந்திய நகரமான லக்னோவில் திங்கட்கிழமை வணிகக் கட்டிடம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில், குறைந்தது 14 பேர் உயிரிழந்தனர்.

உயிரிழந்தவர்களில் பெரும்பாலும் மாணவர்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

அலிகஞ்ச் பகுதியில், கீழ்த்தளத்தில் செல்லப் பிராணிகள் கடையும் கால்நடை சிகிச்சையகமும், மேல்தளத்தில் கல்வி மையமும் அனிமேஷன் ஸ்டுடியோவும் செயல்பட்டு வந்த கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டது.

சம்பவ இடத்திலிருந்து 14 உடல்கள் மீட்கப்பட்டதாக உத்தரப் பிரதேச துணை முதலமைச்சர் பிரஜேஷ் பதக் தெரிவித்தார்.

இச்சம்பவத்தில், குறைந்தது 10 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

தீ விபத்திற்கான காரணம் குறித்து உடனடியாகத் தெரியவில்லை.

கடும் புகை மீட்புப் பணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தியதால், தீயணைப்பு வீரர்கள் கட்டிடத்தின் பின்புறச் சுவரை உடைத்து உள்ளே நுழைய வேண்டியிருந்தது.

இந்தியாவில் கட்டிடச் சட்டங்கள் மற்றும் பாதுகாப்பு விதிமுறைகள் மீறப்படுவதால், உயிரிழப்பை ஏற்படுத்தும் தீ விபத்துகள் அடிக்கடி நிகழ்கின்றன.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)