Ad Banner
Ad Banner
 விளையாட்டு

உஸ்பெகிஸ்தானை 5-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி போர்த்துகல் அசத்தல் வெற்றி

24/06/2026 06:41 PM

போர்துகல், 24 ஜூன் (பெர்னாமா) -- 2026 உலகக் கிண்ண காற்பந்தாட்டத்தின், இன்று நடைபெற்ற ‘கே’ குழு ஆட்டத்தில் போர்த்துகல் அணி, உஸ்பெகிஸ்தானை 5-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அசத்தலான வெற்றியைப் பதிவு செய்தது.

ஆட்டம் தொடங்கிய 6-ஆவது நிமிடத்திலேயே போர்த்துகலின் நட்சத்திர ஆட்டக்காரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ முதல் கோலை அடித்து தமது அணியை முன்னிலை வகிக்க செய்தார்.

தொடர்ந்து 17-ஆவது நிமிடத்தில் நூனோ மெண்டஸ் இரண்டாவது கோலை அடிக்க , முதல் பாதி முடிவதற்கு முன்னர் மூன்றாவது கோலை போட்டு ரொனால்டோ முதல் பாதி ஆட்டத்தை முடித்து வைத்தார்.

இரண்டாம் பாதியில் உஸ்பெகிஸ்தானின் தற்காப்பு ஆட்டக்காரர் சுயமாக கோல் அடித்ததால், ஆட்டம் 4-0 ஆக மாறியது.

ஆட்டத்தின் இறுதிக் கட்டத்தில் ரஃபேல் லியோ மேலும் ஒரு கோல் அடித்து போர்த்துகலின் வெற்றியை உறுதி செய்தார்.

‘கே’ குழுவுக்கான மற்றோர் ஆட்டத்தில், காங்கோ ஜனநாயக குடியரசை, கொலம்பியா 1-0 என்ற கோலில் வீழ்த்தியது.

இந்த வெற்றியின் வழி, 6 புள்ளிகளுடன் குழு அளவில் கொலம்பியா முதல் இடத்தில் உள்ள நிலையில், 4 புள்ளிகளுடன் போர்த்துகல் இரண்டாம் இடத்தில் உள்ளது.

இதனிடையே, இன்று நடைபெற்ற எல் குழுவுக்கான ஆட்டத்தில், இங்கிலாந்தும் கானாவும் 0-0 என சமநிலை கண்ட நிலையில்,

அதே குழுவில் களமிறங்கிய குரோஷியா, பனாமாவை 1-0 என்ற கோலில் தோற்கடித்தது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)