கராகாஸ், 25 ஜூன் (பெர்னாமா) -- முக்கியமான கடல் வழித்தடங்கள் வழியாகச் செல்லும் கப்பல்களுக்குக் கட்டணம் விதிக்கும் வகையிலான எந்தவொரு இறுதி உடன்பாட்டையும் தாம் எதிர்க்கப்போவதாக அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
மேலும், இத்தகைய நடவடிக்கை உலகளவில் ஒரு தவறான முன்னுதாரணமாக அமைந்து விடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
இத்தகைய நிபந்தனைகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்று தெரிவித்துள்ள டிரம்ப், இதே போன்ற நடைமுறைகளை மற்ற இடங்களிலும் கோருவதற்கு வழிவகுத்துவிடும் என்று குறிப்பிட்டார்.
''இது எனக்கு ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று, ஏனெனில் எங்களிடம் ஏராளமான நீரிணைகள் உள்ளன. நீங்கள் அவர்களுக்கு அவ்வாறு செய்தால் மற்றவர்களுக்கும் அதைச் செய்ய வேண்டியிருக்கும். மற்ற நீரிணைகளிலும் நான் இதை அனுமதிக்க மாட்டேன். நிச்சயமாக இது நிலைமையை முற்றிலும் மாற்றிவிடும்'', என்றார் அவர்.
ஓவல் அலுவலகத்தில் நேட்டோ பொதுச் செயலாளர் மார்க் ரூட் உடன் இணைந்து நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில்
டிரம்ப் அவ்வாறு கூறினார்.
மேலும், ஈரானுடனான பேச்சுவார்த்தைகள் மிகச் சிறப்பாக நடைபெற்று வருவதாகவும் கூடிய விரைவில் அது இறுதி செய்யப்படும் என்று அவர் விவரித்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)