டெங்கில், 26 ஜூன் (பெர்னாமா) -- மலேசியாவின் ஜனநாயக நடைமுறையில், ஜோகூர் மாநிலத் தேர்தலில் மும்முனை போட்டி நிலவும் என்ற எதிர்பார்ப்பு வழக்கமான ஒன்றாகும்.
இருப்பினும், தேர்தல் முழுவதும் அனைத்துக் கட்சிகளும் கண்ணியமாகப் பிரச்சாரம் செய்ய வேண்டும் என்று அனைத்து தரப்பினருக்கும் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் நினைவூட்டினார்.
''ஜனநாயக நடைமுறையில் மூன்று முதல் ஆறு என்பது இயல்பானது. பிரச்சாரம் கண்ணியமாக இருக்கட்டும், ஒழுக்கத்தைக் கடைபிடியுங்கள், பணிவை மறந்துவிடாதீர்கள். நம்பிக்கைக் கூட்டணி அடைவுநிலையை மேம்படுத்திக் காட்ட முயற்சிக்கிறது. ஆணவத்தைக் காட்டாதீர்கள், 'அந்த நபரை நிராகரியுங்கள், இவரை நிராகரியுங்கள்' என்று சொல்லாதீர்கள்... ஒத்துழைப்பு வழங்குங்கள், இதுதான் மலேசியாவின் இயல்பு. சற்று பணிவான அணுகுமுறையைக் கடைப்பிடியுங்கள்,'' என்றார் அவர்.
ஜோகூர் மாநிலத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் செயல்முறை, வரும் சனிக்கிழமை 56 வேட்புமனு மையங்களை உட்படுத்தி நடைபெறத் திட்டமிடப்பட்டுள்ளது.
அதோடு, முன்கூட்டியே வாக்களிப்பு ஜூலை 7-ஆம் தேதியும், வாக்களிப்பு ஜூலை 11-ஆம் தேதியும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)