Ad Banner
Ad Banner
Ad Banner
 விளையாட்டு

2026 உலகக் கிண்ணம்; அடுத்த கட்டத்தில் இக்குவாடோர்

26/06/2026 07:50 PM

நியூ ஜெர்சி, 26 ஜூன் (பெர்னாமா) -- 2026 உலகக் கிண்ண காற்பந்துப் போட்டியில் E பிரிவுக்கான இறுதி ஆட்டத்தில் இக்குவாடோர் 2 - 1 என ஜெர்மனியை வீழ்த்தியது.

இந்த வெற்றியின் மூலம் குழுப் பிரிவில் மூன்றாம் இடத்தைப் பிடித்த சிறந்த எட்டு நாடுகளில், ஒன்றாக இக்குவாடோர், 32 அணிகள் பங்கேற்கும் சுற்றுக்குத் தகுதிப் பெற்றுள்ளது. 

இவ்வாட்டத்தில் முதலில் கோல் அடித்தது ஜெர்மனியே என்றாலும், அதன் பின்னர் இரு கோல்களைப் புகுத்தி இக்குவடோர் வெற்றியை உறுதிசெய்தது.

ஜெர்மனி ஏற்கனவே அடுத்த சுற்றுக்குத் தகுதி பெற்றிருந்தாலும் தனது நிலையை தற்காக்க தவறியதால் இதில் அதிர்ச்சி தோல்வி கண்டது.

போட்டியில், இக்குவடோர் விளையாடிய முதல் இரு ஆட்டங்கள் சமநிலையில் முடிந்ததால், இறுதி வாய்ப்பை நழுவவிடாமல் அவ்வணி தீவிரமாக நம்பிக்கையுடன் விளையாடி வெற்றிப் பெற்றது.

மற்றொரு குழு போட்டியில், Côte d'Ivoire அணி Curaçao அணியை 2-0 என்ற கோல் கணக்கில் எளிதாக வீழ்த்தியது.

இதில், நிக்கோலஸ் பெபெ 7-வது மற்றும் 64-வது நிமிடங்களில் இரண்டு அழகான கோல்களை அடித்தார்.

இதனிடையே, F பிரிவில் துனிசியாவை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறியதுடன் அக்குழுவில் அதிக புள்ளிகளோடு நெதர்லாந்து முன்னிலை வகிக்கிறது.

கான்சாஸ் சிட்டியில் நடைபெற்ற இந்த போட்டி தொடக்கம் முதலே விறுவிறுப்பாக அமைந்தது.

அதில், துனிசியா சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும், வெற்றி வாய்ப்பு நெதலாந்து அணிக்கே சாதகமாக முடிந்தது.

இந்த ஆபார வெற்றியால் அவ்வணி 32 நாடுகள் பங்கேற்கும் சுற்றுக்குத் தகுதிப் பெற்றுள்ளது

Dallas அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில், ஜப்பான் - சுவீடன் அணிகள் மோதிய போட்டி 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிந்தது.

போட்டியில் தொடக்கம் முதலே இரு அணிகளும் சமபலத்துடன் விளையாடியதால் தலா ஒரு கோல் போட்டன.

இம்முடிவால், ஜப்பான் F பிரிவில் நெதர்லாந்துக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடம் பிடித்து அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

-- பெர்னாமா 

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)