GE15 NEWS  
பொது

நாட்டின் வேலையில்லாப் பிரச்சனை மிகக் குறைந்த அளவுக்குச் சரிந்திருக்கின்றது

09/12/2022 06:20 PM

கோலாலம்பூர், 09 டிசம்பர் (பெர்னாமா) -- கொவிட்-19 பெருந்தொற்று தொடங்கியது முதல், நாட்டின் வேலையில்லாப் பிரச்சனை மிகக் குறைந்த அளவுக்குச் சரிவுக் கண்டிருக்கிறது.

இவ்வாண்டு செப்டம்பரில் ஆறு லட்சத்து ஐயாயிரமாக இருந்த வேலையில்லாவர்களின் எண்ணிக்கை அக்டோபர் மாதத்தில் ஆறு லட்சத்து இரண்டாயிரமாகக் குறைந்திருப்பதாக, புள்ளிவிவரத் துறை கூறுகிறது.

நாட்டில் வேலையில்லாதோர் விகிதம் தொடர்ந்து 3.6 விழுக்காடாக இருந்து வருவதாக, அத்துறைத் தலைவர், டத்தோ ஶ்ரீ டாக்டர் முகமட் உசிர் மஹிடின் தெரிவித்தார்.

2020-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் பதிவான பெருந்தொற்றுக்கு முந்திய 3.3 விழுக்காட்டைக் காட்டிலும் 0.3 விழுக்காடு உயர்வாகும் என்று அவர் கூறினார்.

அக்டோபரில் தொழிலாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்ததாகக் கூறிய அவர், ஒவ்வொரு மாதமும் 0.2 விழுக்காடு அதிகரித்து, தொழிலாளர்களின் எண்ணிக்கை தற்போது ஒரு கோடியே 66 லட்சத்து 80 ஆயிரமாக இருப்பதாகத் தெரிவித்தார்.

அதோடு, செப்டம்பர் மாதத்துடன் ஒப்பிடும்போது அவ்வெண்ணிக்கை ஒரு கோடியே 66 லட்சத்து 60 ஆயிரமாக இருந்ததாகவும் அவர் கூறினார்.

நாட்டின் நிலையான பொருளாதார அடித்தளத்தை, 2020-ஆம் ஆண்டு அக்டோபரில் நிலவிய நம்பிக்கையான ஊழியர் செயல்திறன் பிரதிபலிப்பதாகவும் அதற்குத் தொடர்ச்சியான பொருளாதாரமும் சமூக நடவடிக்கைகளும் முக்கியப் பங்கை ஆற்றியதாக முகமட் உசிர் கூறினார்.

-பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)