2024 பூமிபுத்ரா பொருளாதார காங்கிரஸ்: புதிய வாய்ப்புகளை அடையாளம் காணும்

14/02/2024 07:11 PM

புத்ராஜெயா, 14 பிப்ரவரி (பெர்னாமா) -- 2024-ஆம் ஆண்டு பூமிபுத்ரா பொருளாதார காங்கிரஸ், கே.இ.பி. 2024, நாட்டில் இதுவரை ஈடுபடாத துறைகளில் புதிய தொழில்நுட்பத்தையும் புதிய வாய்ப்புகளையும் அடையாளம் காணும்.

கே.இ.பி. 2024 வழி, பூமிபுத்ராக்களுக்கான திட்டங்களுக்கான இலக்கையும் புதிய அணுகுமுறைகளையும் அரசாங்கம் நிர்ணயிக்கும் என்று துணைப் பிரதமர் டத்தோ ஶ்ரீ டாக்டர் அஹ்மட் சாஹிட் ஹமிடி தெரிவித்தார்.

புத்ராஜெயா அனைத்துலக மாநாட்டு மையத்தில் பிப்ரவரி 29 தொடங்கி மார்ச் 2-ஆம் தேதி வரை நடைபெறவிருக்கும் இந்த காங்கிரசில் குறிப்பிட்ட 10 துறைகளை உள்ளடக்கிய விளக்கமளிப்பு இடம்பெறும்.

கே.இ.பி. 2024 சந்திப்பில் கிடைத்த தகவல்களை உள்ளடக்கி ஒரு தீர்மானம் உருவாக்கப்படவிருக்கிறது.

''இச்சந்திப்பின் வழி கிடைத்த தகவல்களை விவரிக்கும் சம்பந்தப்பட்ட 10 துறைகளுக்கான ஆய்வின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் ஆற்றலை மதிப்பிடுவது மற்றும் வலுப்படுத்துவது குறித்து நாங்கள் கவனிப்போம்,'' என்றார் அவர்.

இந்த காங்கிரசில், நாடு முழுவதிலுமுள்ள 3,000 பூமிபுத்ராக்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)