உலகம்

இலங்கையில் தொழுநோயைக் கட்டுப்படுத்த உலக சுகாதார நிறுவனம் உதவும்

21/02/2024 08:32 PM

கொழும்பு, 21 பிப்ரவரி (பெர்னாமா-சின்ஹுவா) -- இலங்கையில் அதிகரித்து வரும் தொழுநோயைக் கட்டுப்படுத்துவதில் உலக சுகாதார நிறுவனம் உதவவிருக்கிறது.

அதன் பொருட்டு, அந்நிறுவனத்தைச் சேர்ந்த தொழுநோய் மருத்துவ நிபுணர் குழு இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளவிருப்பதாக தொழுநோய் எதிர்ப்பு பிரச்சார இயக்குநர் பிரசாத் ரனவீரா தெரிவித்தார்.

2023ஆம் ஆண்டில் இலங்கையில் தொழுநோயாளிகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்வு கண்டுள்ளது.

கொவிட்-19 காலக்கட்டத்தில் நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு மேற்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து, 2020 மற்றும் 2021-ஆம் ஆண்டுகளில் அந்நாட்டில் தொழுநோய் சம்பவங்களின் எண்ணிக்கை சற்று குறைந்திருந்தது.

2023-ஆம் ஆண்டில் இலங்கையில் 1,550கும் மேற்பட்ட தொழுநோய் சம்பவங்கள் பதிவாகிய வேளையில், அவர்களில் 173 பேர் பள்ளி மாணவர்களாவர் என்று ரனவீரா கூறினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)