உலகம்

சிறுபான்மை முஸ்லிம்களை குறிவைத்து மோடி விமர்சனம் - காங்கிரஸ் குற்றச்சாட்டு

23/04/2024 06:18 PM

ராஜஸ்தான், 23 ஏப்ரல் (பெர்னாமா) -- இந்தியாவின் சிறுபான்மை முஸ்லிம்களை குறிவைத்து அந்நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி விமர்சித்துள்ளதாக எதிர்கட்சியான காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.

அண்மையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் மோடி அவ்வாறு உரையாற்றியதால் இது குறித்து தேர்தல் ஆணையத்திடம் புகார் செய்யப்பட்டுள்ளது.

இன உணர்வை தூண்டும் வகையில் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படக்கூடாது என்பது அந்நாட்டின் தேர்தல் விதிமுறைகளில் ஒன்றாகும்.

அதனை அந்நாட்டின் பிரதமர் மீறியுள்ளதாக காங்கிரஸ் சாடியுள்ளது.

ராஜாஸ்தானில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில், இந்தியாவில் உள்ள 20 கோடி இஸ்லாம் மக்களை அவர் அச்சுறுத்தியிருப்பதாகவும் காங்கிரஸ் கூறியது.

மோடி மீது தேர்தல் ஆணையம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அக்கட்சி அறிவுறுத்தியுள்ளது.

இந்தியாவில் கட்டம் கட்டமாக நடைபெற்று வரும் நாடாளுமன்றத் தேர்தலின் முடிவு ஜூன் 4-ஆம் தேதி அறிவிக்கப்படும்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)