பொது

மாமன்னருடன் சிங்கப்பூர் தூதர் சந்திப்பு

24/04/2024 08:04 PM

கோலாலம்பூர், 24 ஏப்ரல் (பெர்னாமா) -- மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம், மலேசியாவுக்கான சிங்கப்பூர் தூதர் வானு கோபால மேனனை நேற்று இஸ்தானா நெகாராவில் சந்தித்தார்.

மலேசியா மற்றும் சிங்கப்பூர் இடையேயான இருதரப்பு உறவுகள் தொடர்பான பல்வேறு விஷயங்கள் இந்த சந்திப்பில் விவாதிக்கப்பட்டதாக தமது முகநூலில் வெளியிட்ட ஒரு பதிவில் மாமன்னர் தெரிவித்துள்ளார்.

கடந்த 2023 ஆம் ஆண்டின் முதல் பாதியில், சீனாவிற்கு அடுத்தபடியாக மலேசியாவின் இரண்டாவது பெரிய வர்த்தகப் பங்காளியாக சிங்கப்பூர் இருந்தது.

அப்போது மொத்த வர்த்தகம் 1,813 கோடி ரிங்கிட்டாக இருந்தது.

இது 2022ஆம் ஆண்டின் அதே காலகட்டத்தில் பதிவுசெய்யப்பட்ட 1,708 கோடி ரிங்கிட்டைவிட விட 6.1 விழுக்காடு அதிகரித்துள்ளதாக அப்பதிவில் மாமன்னர் குறிப்பிட்டிருந்தார்.

அதேநேரம் கடந்த ஆண்டு மலேசியாவால் பதிவு செய்யப்பட்ட அந்நிய நேரடி முதலீட்டில் 8.3 விழுக்காடு பங்களிப்பை சிங்கப்பூர் வழங்கியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)