உலகம்

வெப்ப அலையின் தாக்கத்தால் உலகில் சுமார் 500 கோடி பாதிப்பு

28/06/2024 08:25 PM

புது டெல்ல் , 28 ஜூன் (பெர்னாமா) -- ஜூன் 16 முதல் 24 வரையிலான காலநிலை மாற்றத்தால் உலகில் ஏறக்குறைய 500 கோடி  மக்கள் கடுமையான வெப்பத்தை அனுபவித்து வருகின்றனர்.

அதில், பெட்ரோல், எரிவாயு மற்றும் நிலக்கரி எரிப்பதால் ஏற்படும் காலநிலை மாற்றத்தின் விளைவாக, இந்தியாவில் 61 கோடியே 90 லட்சம் மக்களும், சீனாவில் 57 கோடியே 90 லட்சம் மக்களும் கடுமையான வெப்பத்திற்கு ஆளாகியுள்ளனர்.

இதைத் தொடர்ந்து இந்தோனேசியாவில் 23 கோடியே 10 லட்சம், நைஜீரியாவில் 20 கோடியே ஆறு லட்சம், பிரேசிலில் 17 கோடியே 60 லட்சம், வங்காளதேசத்தில் 17 கோடியே 10 லட்சம், அமெரிக்காவில் 16 கோடியே ஐந்து லட்சம், ஐரோப்பாவில் 15 கோடியே 20 லட்சம், மெக்சிகோவில் 12 கோடியே 30 லட்சம், எத்தியோபியாவில் 12 கோடியே 10 லட்சம், எகிப்தில் 10 கோடியே 30 லட்சம் பேர் வெப்பத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதுமட்டுமின்றி, சவூதி அரேபியாவில் கடும் வெப்பம் காரணமாக 1,300 யாத்ரீகள் உயிரிழந்துள்ளனர்.

ஒட்டுமொத்தமாக கடந்த 30 ஆண்டுகளில், உலகின் பல நாடுகள் எதிர்நோக்கும் வெப்பம் அடைந்த நாள்களின் எண்ணிக்கை 52 விழுக்காடு அதிகரித்துள்ளதாக உலக சுற்றுச்சூழல் மேம்பாட்டுக்கான பன்னாட்டு கழகம் தெரிவித்துள்ளது. 

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: 1130 (ஆஸ்ட்ரோ 502)