உலகம்

கட்சியின் தோல்விக்குப் பொறுப்பேற்கிறேன் - ரிஷி சுனக் உருக்கம்

05/07/2024 04:50 PM

லண்டன், 5 ஜூலை (பெர்னாமா) -- இங்கிலாந்து பொதுத் தேர்தலில் தொழிலாளர் கட்சி வெற்றி பெற்றதை ஏற்றுக் கொண்ட, கன்கன்சா்வேட்டிவ் கட்சி தலைவரும் இங்கிலாந்து பிரதமருமான ரிஷி சுனக் அந்நாட்டு மக்கள் நிதானமான தீர்ப்பை வழங்கியுள்ளதாக கூறியுள்ளார்.

தனது கட்சியின் தோல்விக்கு தாம் பொறுப்பேற்பதாகக் கூறிய அவர், "கற்கவும் சிந்திக்கவும் அதிகம் உள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார்.

''இந்த பொதுத் தேர்தலில் தொழிலாளர் கட்சி வெற்றி பெற்றுள்ளது. கீர் ஸ்டார்மரின் (தொழிலாளர் கட்சி தலைவர்) வெற்றிக்கு அவருக்கு வாழ்த்து தெரிவிக்க நான் அழைத்தேன். இன்றையக் காலக்கட்டத்தில், அதிகாரம் அனைத்து பக்கங்களிலும் நல்ல அமைதியான மற்றும் சரியான முறையில் கை மாறும். அதுவே, நம் நாட்டின் நிலைத்தன்மை மற்றும் எதிர்காலத்திற்கு நாம் அனைவருக்கும் நம்பிக்கையை அளிக்க வேண்டும். பிரிட்டன் மக்கள் இன்று இரவு ஒரு நிதானமான தீர்ப்பை வழங்கியுள்ளனர். கற்றுக்கொள்ளவும் சிந்திக்கவும் அதிகம் உள்ளது. இந்தத் தோல்விக்கு நான் பொறுப்பேற்கிறேன்,'' என்றார் அவர்.

அயராத முயற்சிகளும் சமூக அர்ப்பணிப்பும் இருந்தபோதிலும், தங்கள் கட்சி தோல்வி கண்டிருப்பது குறித்து வருத்தம் தெரிவித்த ரிஷி சுனக், கடினமாக உழைத்த கன்சர்வேடிவ் கட்சி வேட்பாளர்களிடம் மன்னிப்பும் கேட்டுக் கொண்டுள்ளார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)
 

 KEYWORDS
 தொடர்புடைய செய்திகள்
 பரிந்துரை