அரசியல்

நாளை சுங்கைப் பாக்காப் இடைத்தேர்தல்; 39,151 பேர் வாக்களிப்பர்

05/07/2024 05:34 PM

நிபோங் திபால், 5 ஜூலை (பெர்னாமா) -- நாளை நடைபெறவிருக்கும் சுங்கை பாக்காப் சட்டமன்ற இடைத்தேர்தலில், 39, 151 வாக்காளர்கள் தங்களின் ஜனநாயக கடமையை நிறைவேற்றுவர்.

ஒன்பது வாக்களிப்பு மையங்களைச் சேர்ந்த 65 வாக்குச் சாவடிகளும் காலை மணி எட்டு முதல் மாலை ஆறு வரை திறந்திருக்கும் என்று தேர்தல் ஆணைய செயலாளர் டத்தோ இக்மால்ருடின் இஷாக் தெரிவித்தார்.

இடைத்தேர்தலை சுமூகமாக நடத்த தேர்தல் ஆணையம் முழுமையாக தயாராக உள்ளதுதாகவும் அவர் கூறினார்.

''தேர்தலை முன்னிட்டு வாக்குப் பெட்டி, தேர்தல் மை, வாக்குச் சீட்டு உட்பட தளவாடங்கள், படிவங்கள் போன்றவற்றை நாங்கள் சரிபார்த்து வருகிறோம்,'' என்றார் இக்மால்ருடின்.

இடைத்தேர்தலை முன்னிட்டு நிபோங் திபால், ஜாவி பல்நோக்கு மண்டபத்தின் ஆயத்தப் பணிகளை பார்வையிட்ட பின்னர் செய்தியாளர் சந்திப்பில் அவர் அவ்வாறு கூறினார்.

தேர்தல் நடவடிக்கை சீராகவும் பாதுகாப்பாகவும் நடைபெறுவதைக் கண்காணிக்க 552 தேர்தல் ஆணைய பணியாளர்களும் 600 போலீஸ் படையினரும் பணிக்கு அமர்த்தப்படுகின்றனர்.

கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குள் வாக்காளர்கள் தங்களின் ஜனநாயகக் கடைமையை நிறைவேற்ற வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.

இத்தேர்தலில் நேரடிப் போட்டி நடைபெறும் வேளையில் நம்பிக்கைக் கூட்டணியை பிரதிநிதித்து டாக்டர் ஜொஹாரி அரிஃபினும் பெரிக்காத்தான் நேஷனலைப் பிரதிநிதித்து அபிடின் இஸ்மாயிலும் போட்டியிடுகின்றனர்.

கடந்த மே 24ஆம் தேதி அத்தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நோர் சம்ரி லத்திப் காலமானதைத் தொடர்ந்து அங்கு இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)
 

 KEYWORDS
 தொடர்புடைய செய்திகள்
 பரிந்துரை