அரசியல்

பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதால் சுங்கை பாக்காப்பில் வாக்களிக்கத் தயங்காதீர்

05/07/2024 05:37 PM

நிபோங் திபால், 5 ஜூலை (பெர்னாமா) -- சுங்கை பாக்காப் சட்டமன்றத் தொகுதியில் பாதுகாப்பு அம்சம் பலப்படுத்தப்பட்டுள்ளதால், நாளை அங்கு வாக்களிக்கச் செல்பவர்கள் அது குறித்து கவலைக் கொள்ள வேண்டாம்.

வாக்களிப்பு நடவடிக்கை சீராக இருப்பதைக் கண்காணிக்க சுமார் 800 போலீசார் அங்கு பணிக்கு அமர்த்தப்படுவதாக பினாங்கு மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஹம்சா அஹ்மாட் உத்தரவாதம் அளித்தார்.

''பாதுகாப்பு அம்சம், போக்குவரத்து, பொதுப் பாதுகாப்பு என்று அனைத்து நிலையிலும் நாங்கள் போதுமான முன்னேற்பாடுகளை மேற்கொண்டிருக்கிறோம். எனவே, வாக்களிக்க வெளியேறலாமா என்று ஐயப்படுவதை விடுத்து நம்பிக்கையாக வந்து வாக்களிக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்,'' என்றார் அவர்.

சுங்கை பாக்காப் இடைத்தேர்தலை முன்னிட்டு இன்று செபராங் பிறை செலாத்தான் மாவட்ட போலீஸ் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்புக் கூட்டத்தில் ஹம்சா அஹ்மாட் அவ்வாறு கூறினார்.

அதேவேளையில் வாக்காளார்கள் தங்களின் அடையாள அட்டைகளை வேறு நபரிடம் கொடுக்க வேண்டாம்.

ஏனெனில், தவறான பயன்பாடு உள்ளிட்ட மற்ற நோக்கத்திற்காக அவர்கள் பயன்படுத்தவும் வாய்ப்புள்ளது என்று அவர் நினைவுறுத்தினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)
 

 KEYWORDS
 தொடர்புடைய செய்திகள்
 பரிந்துரை