பொது

சுங்கை பாக்காப் வாக்களிப்பு; சினமூட்டும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டாம் என வலியுறுத்து

05/07/2024 06:45 PM

புத்ராஜெயா, 5 ஜூலை (பெர்னாமா) -- நாளை வாக்களிப்பு நடைபெறும் வேளயில், அனைத்து கட்சிகளும் ஆரோக்கியமான முறையில் இத்தேர்தலை எதிர்கொள்ள வேண்டுமே தவிர சினமூட்டும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டாம் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

அதற்கு மாறாக நடந்துக்கொள்ளும் தரப்பினர் மீது மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம், எம்சிஎம்சி மற்றும் அரச மலேசிய போலீஸ் படை பிடிஆர்எம் ஆகியவை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கும் என்று தொடர்பு அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில் கூறியுள்ளார்.

இதனிடையே, சுங்கை பாக்காப் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான பிரச்சாரக் காலம் முழுவதும் பெறப்பட்ட புகார்களின் அடிப்படையில், போலீஸ் இரண்டு விசாரணை அறிக்கைகளை திறந்துள்ளதோடு இருவரையும் கைது செய்துள்ளது.

கடந்த ஜூன் 22ஆம் தேதி தொடங்கி இன்று வரை தமது தரப்பிற்கு ஐந்து போலீஸ் புகார்கள் கிடைக்கபெற்றுள்ள நிலையில், அப்புகார் குறித்து விரிவான விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக பினாங்கு மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஹம்சா அஹ்மாட் தெரிவித்தார்.

நாளை நடைபெறவிருக்கும் சுங்கை பாக்காப் இடைத்தேர்தலை முன்னிட்டு இன்று செபராங் பிறை செலாத்தான் போலீஸ் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்புக் கூட்டத்தில் அவர் அவ்வாறு கூறினார்.

தேர்தல் காலம் முழுவதும், அதாவது ஜூன் 22 முதல் இன்று வரை போட்டியிடும் அரசியல் கட்சிகளுக்கு பிரச்சாரம், உரை, கட்சிகள் உடனான சந்திப்புக் கூட்டம் ஆகியவற்றுக்கு போலீஸ் இதுவரை 181 பெர்மிட்டுகள் வழங்கியுள்ள நிலையில் அதில் 97 நம்பிக்கைக் கூட்டணிக்கு இதர பெர்மிட்டுகள் பெரிக்காத்தான் நேஷனலுக்கும் வழங்கப்பட்டிருந்தது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)