பொது

எச்.ஆர்.டி கோர்ப் விவகாரம்; மனிதவள அமைச்சு சமர்ப்பித்த ஆவணங்களை எஸ்.பி.ஆர்.எம் ஆராயவிருக்கிறது

05/07/2024 07:15 PM

புத்ராஜெயா, 5 ஜூலை (பெர்னாமா) -- எச்.ஆர்.டி கோர்ப் எனப்படும் மனிதவள மேம்பாட்டு வாரியத்தை உட்படுத்திய விவகாரம் தொடர்பில் இன்று மனிதவள அமைச்சு சமர்ப்பித்த அனைத்து ஆவணங்களையும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம், எஸ்.பி.ஆர்.எம் ஆராயவிருக்கிறது.

எச்.ஆர்.டி கோர்ப்பிற்கு எதிராக தேசிய தேசிய தணிக்கைத் துறை தலைவரின் அறிக்கைத் தொடர்பான சில தகவல்களையும் ஆவணங்களையும் மனிதவள அமைச்சின் தலைமைச் செயலாளர் டத்தோ ஶ்ரீ கைருல் ஸைமி டாவுட்டிமிருந்து பெற்றதை எஸ்.பி.ஆர்.எம் இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் உறுதிப்படுத்தியுள்ளது.

சம்பந்தப்பட்ட அந்த வாரியத்தில், 2009ஆம் ஆண்டு எஸ்.பி.ஆர்.எம் சட்டத்தின் கீழ், ஊழல் அல்லது மோசடி எதுவும் நிகழ்ந்துள்ளதாக என்பதை கண்டறிய அனைத்து ஆவணங்களையும்  எஸ்.பி.ஆர்.எம் ஆராயவிருப்பதாக அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2024-ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டின், எல்.கே.ஏ.என் எனப்படும், தேசிய தணிக்கைத் துறை தலைவர் அறிக்கை மற்றும் பொது கணக்குக் குழு, பிஏசி எழுப்பிய விவகாரம் தொடர்பில் தயாரிக்கப்பட்ட அறிக்கை, புத்ராஜெயாவில் உள்ள எஸ்.பி.ஆர்.எம் தலைமையகத்தில் சமர்ப்பிக்கப்பட்டதாக முன்னதாக கைருல் ஸைமி தெரிவித்திருந்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)