பொது

எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஒதுக்கீடு தனித்தனியே கோரப்படக்கூடாது

09/07/2024 04:08 PM

கோலாலம்பூர், 09 ஜூலை (பெர்னாமா) -- எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஒதுக்கீடுகள் ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினராலும் தனித்தனியாக கோரப்படக்கூடாது.

மாறாக, அரசாங்கப் பிரதிநிதிகளுடன் இணைந்து எதிர்க்கட்சித் தொகுதியின் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளால் பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும் என்று டத்தோ ஶ்ரீ அன்வார் தெரிவித்தார்.

ஒதுக்கீடுகளை வழங்க அரசாங்கம் தயாராக இருந்தாலும் அது அனைத்து ஜனநாயக நாடுகளிலும் நடைமுறையில் உள்ள நாடாளுமன்ற அணுகுமுறைக்கு ஏற்ப செயல்படுத்தப்பட வேண்டும் என்று அவர் மீண்டும் வலியுறுத்தினார்.

எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஒதுக்கீடு குறித்து மூவார் நாடாளுமன்ற உறுப்பினர் சைட் சாடிக் சைட் அப்துல் ரஹ்மான் இன்று மக்களவையில் எழுப்பியக் கேள்விக்கு பிரதமர் அவ்வாறு பதிலளித்தார்.

-- பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]