பொது

மறைந்த எஷாவுக்கு டிக்டோக் மூலம் மிரட்டல்; மேலும் மூவர் மீது போலீஸ் புகார்

13/07/2024 07:15 PM

கோம்பாக், 13 ஜூலை (பெர்னாமா) -- சமூக வலைத்தளத்தில் செல்வாக்குமிக்க எஷா என்றழைக்கப்பட்ட ஏ. ராஜேஸ்வரிக்கு. டிக்டோக் செயலி வாயிலாக முன்னாள் போலீஸ் அதிகாரி ஒருவர் உட்பட மூவர் மிரட்டல் விடுத்ததாக போலீஸ் தரப்பு மீண்டும் புகார் பெற்றுள்ளது.

வெள்ளிக்கிழமை மாலை மணி 6.34 அளவில், செலாயாங் போலீஸ் நிலையத்தில், எஷாவின் தாயார் பி.ஆர். புஸ்பா அந்த புகாரைச் செய்ததாக, கோம்பாக் மாவட்ட போலீஸ் தலைவர் ஏ.சி.பி. நூர் அரிஃபின் முஹமாட் நாசிர் தெரிவித்தார்.

வங்சா மாஜூ மாவட்ட போலீஸ் தலைமையகத்தின் கீழ் உள்ள கோம்பாக் செத்தியா  குடியிருப்புப் பகுதியில் அச்சம்பவம் நிகழ்ந்துள்ளதால், அப்புகார் ஸ்தாபாக் போலீஸ் நிலையத்திற்கு மாற்றப்பட்டதாக, பெர்னாமா தொடர்பு கொண்டபோது நூர் அரிஃபின் உறுதிப்படுத்தினார்.

முன்னதாக, புஷ்பா தமது மருமகனுடன் கோம்பாக் மாவட்ட போலீஸ் தலைமையகத்திற்கு வந்து புகாரளித்து, விசாரணை அதிகாரியிடம் தமது வாக்குமூலத்தையும் பதிவு செய்திருந்தார்.

இவ்வாரம் முழுவதும், எஷா தொடர்பில் அம்மூவரும் காணொளிகளையும் நேரலையிலும் வந்து விவாதித்ததை தமது பிள்ளைகள் தெரிவித்ததாக புஷ்பா கூறினார்.

அதில் பெண் ஒருவர், எஷா தொடர்பில் சமூக வலைத்தளங்களில் விவாதித்ததால், முன்பு கைதும் செய்யப்பட்டுள்ளார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)