பொது

ஆறுகளைப் பாதுகாக்க 95 கோடி ரிங்கிட் ஒதுக்கீடு

09/07/2024 06:21 PM

கோலாலம்பூர், 9 ஜூலை (பெர்னாமா) -- 12ஆவது மலேசியா திட்டத்தில் வெள்ள அபாயத்தையும் எதிர்பாரா அவசர வேலைகளையும் குறைக்கும் முயற்சியாக ஆறுகளைப் பாதுகாக்க மொத்தம் 95 கோடி ரிங்கிட் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஒவ்வொரு மாநிலத்திலும் வெள்ள அபாயத்தை குறைத்து ஆறுகளைப் பாதுகாக்க அந்த மொத்தத் தொகையில் 41 கோடி ரிங்கிட் ஒதுக்கிடப்பட்டுள்ளதாக துணைப் பிரதமரும் எரிசக்தி மாற்றம் மற்றும் நீர் உருமாற்ற அமைச்சருமான டத்தோ ஶ்ரீ ஃபடில்லா யூசோப் தெரிவித்தார்.

இன்று மக்களவையில் கேள்வி பதில் நேரத்தின் போது அவர் அவ்வாறு தெரிவித்தார்.

தொடர் மழையின் போது திடீர் வெள்ளம் ஏற்படுவதைத் தவிர்ப்பதற்காக, முறையான கால்வாய் மற்றும் வடிகால் இல்லாத பிரச்சனையைக் கையாள ஒவ்வொரு மாநிலத்தின் நீர்ப்பாசனம் மற்றும் வடிகால் துறைக்கும் வழங்கப்படும் ஒதுக்கீடுகள் குறித்து பெங்காலான் செபா நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ டாக்டர் அஹ்மட் மர்சுக் ஷாரி எழுப்பிய கேள்விக்கு அவர் அவ்வாறு பதிலாளித்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)