விளையாட்டு

2024 யூரோ காற்பந்து போட்டி; இறுதியாட்டத்திற்கு ஸ்பெயின் தேர்வு

10/07/2024 07:36 PM

முனிக், 10 ஜூலை (பெர்னாமா) -- 2024 யூரோ காற்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்திற்கு ஸ்பெயின் தேர்வாகியது.

இன்று அதிகாலை நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் ஸ்பெயின் பிரான்சுடன் மோதியது. முதல் பாதி ஆட்டம் விருவிருப்பாகத் தொடங்கியது.

9-வது நிமிடத்திலேயே பிரான்ஸ் முதல் கோலை அடித்து முன்னணி வகிக்கத் தொடங்கியது.

இருப்பினும், 21 மற்றும் 25-வது நிமிடங்களில் இரு கோல்களை அடித்து ஸ்பெயின் தனது வெற்றியை உறுதி செய்து கொண்டது.

ஆட்டத்தை சமப்படுத்த, இரண்டாம் பாதி ஆட்டத்தில் பிரான்ஸ் பல முயற்சிகளை மேற்கொண்டாலும், அவை தோல்வியில் முடிந்தன.

நாளை அதிகாலை நடைபெறவிருக்கும் நெதர்லாந்து மற்றும் இங்கிலாந்து இடையிலான ஆட்டத்தில், வெற்றிப் பெறும் அணியுடன் ஸ்பெயின் களம் காணும்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)