விளையாட்டு

2024 யூரோ காற்பந்து போட்டி; இறுதியாட்டத்திற்கு இங்கிலாந்து தேர்வு

11/07/2024 06:38 PM

டார்ட்மண்ட், 11 ஜூலை (பெர்னாமா) -- 2024 யூரோ காற்பந்து போட்டியில் இறுதி ஆட்டத்திற்கு இங்கிலாந்து தேர்வாகியது.

இன்று அதிகாலை நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில், இங்கிலாந்து நெதர்லாந்தை 2-1 என்ற கோல்களில் தோற்கடித்தது.

ஆட்டம் தொடங்கிய 7-வது நிமிடத்திலேயே தனது ஒரே கோலை அடித்து நெதர்லாந்து முன்னணி வகித்தது.

இருப்பினும், 18-வது நிமிடத்தில் கிடைத்த பினால்டி வாய்ப்பின் வழி, ஹேரி கேன் இங்கிலாந்தின் முதல் கோலை அடித்து ஆட்டத்தை சமப்படுத்தினார்.

முதல் பாதி ஆட்டம் 1-1 என்று முடிவடைய, இரண்டாம் பாதியின் 90-வது நிமிடத்தில் வாட்கின்ஸ் அடித்த இரண்டாவது கோல் இங்கிலாந்தை இறுதி ஆட்டத்திற்கு அழைத்துச் சென்றது.

வரும் திங்கட்கிழமை அதிகாலை நடைபெறும் இறுதி ஆட்டத்தில், இங்கிலாந்து ஸ்பெயினுடன் மோதவுள்ளது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)