பொது

இணையப் பகடிவதையை கையாளும் பரிந்துரை; நாளைய அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்படும்

11/07/2024 06:39 PM

கோலாலம்பூர், 11 ஜூலை (பெர்னாமா) -- இணைய பகடிவதையைக் கையாள புதிய சட்டத்தை அல்லது நடப்பில் உள்ள சட்டத்தில் திருத்தத்தை மேற்கொள்வதற்கான பரிந்துரை நாளை அமைச்சரவைக் கூட்டத்திற்கு கொண்டுச் செல்லப்படும்.

சமூக வலைத்தளத்தை பாதுகாப்பானதாகவும், அதைப் பயன்படுத்துபவர்கள் இணைய பகடிவதைக்கு ஆளாகுவதைக் கையாளவும் அந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக தொடர்பு அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில் தெரிவித்தார்.

இன்று, நாடாளுமன்றக் கட்டிடத்தில் ஊடகவியலாளர்களுடனான சந்திப்பு நிகழ்ச்சியில் அவர் அவ்வாறு தெரிவித்தார்.

அண்மையில், சிலாங்கூர், கோம்பாக் செத்தியாவில், டிக்டோக் செயலியை பயன்படுத்திய இளம் பெண் ஒருவர் இணைய பகடிவதைக்கு ஆளாகி தற்கொலை செய்துகொண்டார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)