பொது

பொது & தனியார் பள்ளி மாணவர்களின் தரவுகளில் கசிவு ஏற்படாது - ஃபட்லினா உத்தரவாதம்

11/07/2024 06:45 PM

கோலாலம்பூர், 11 ஜூலை (பெர்னாமா) -- பொது மற்றும் தனியார் பள்ளி மாணவர்களின் தரவுகளில் கசிவு ஏற்படாது என்று கல்வி அமைச்சு உத்தரவாதம் அளித்துள்ளது.

குறிப்பாக பல்கலைக்கழகத்தில் சேர்வதற்கு, மாணவர்களின் தரவுகளில் ஏற்படும் கசிவு தொடர்பில் சிக்கல்கள் எழுந்தாலும், அதைக் கண்காணிக்கும் தொடர் நடவடிக்கையை கல்வியமைச்சு மேற்கொண்டு வருவதாக அதன் அமைச்சர் ஃபட்லினா சிடேக் தெரிவித்தார்.

மேலும் அனைத்து மாணவர்களின் உடல் செயல்பாடு, விளையாட்டு மற்றும் புறப்பாடத் திட்டத்தின் மதிப்பீடு PAJSK மதிப்பெண்கள் பூர்த்தி செய்யப்படுவதையும், அதில் மாணவர் விடுபடாமல் இருப்பதையும் அமைச்சு தொடர்ந்து உறுதி செய்வதாக அவர் கூறினார்.

இன்று மக்களவையில் அமைச்சர்களுக்கான கேள்வி நேர அங்கத்தின் போது அவர் அதனைத் தெரிவித்தார்.

PAJSK மதிப்பெண்கள் காலியாக இருக்கும் பட்சத்தில் சிறந்த மாணவர்கள் பல்கலைக்கழகத்தில் சேர்வதற்கும் அல்லது SBP எனப்படும் முழு ஆசிரமப் பள்ளிகளில் பயில்வதற்கும் சிரமம் ஏற்பட்டுள்ளதால், கல்வி அமைச்சின் கீழுள்ள பள்ளிகளைத் தவிர்த்து மற்ற பள்ளிகளுக்கு PAJSK தொடர்பான நடைமுறை வேறுபட்டுள்ளதா என்று குவாந்தான் நாடாளுமன்ற உறுப்பினர் வான் ரசாலி வான் நோர் எழுப்பிய கேள்விக்கு ஃபட்லினா பதிலளித்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)